PSG மற்றும் Mbappé மோதல்.. 25 ஆம் திகதி தீர்ப்பு!

15 ஐப்பசி 2024 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 6919
PSG கழகத்துக்கும் Kylian Mbappé இற்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு இம்மாதம் 25 ஆம் திகதி முடிவு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது Real Madrid கழத்தில் விளையாடி வரும் Mbappé, தனது முன்னாள் கழகமான PSG, தனக்கு நான்கு மாத ஊதியம் வழங்கவில்லை எனவும், அணியிடம் இருந்து 55 மில்லியன் யூரோக்கள் தொகை பெற்றுத்தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
பிரெஞ்சு உதைபந்தாட்ட கழகங்களுக்கான அமைப்பு (commission paritaire des recours de la Ligue de football professionnel) இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், இம்மாதம் 25 ஆம் திகதி இறுதித் தீர்ப்பினை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.