Mbappé மீது பாலியல் குற்றச்சாட்டு..??!!

16 ஐப்பசி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 9321
உதைபந்தாட்ட வீரர் Mbappé மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் Stockholm இல் வைத்து இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரியல் மட்ரிட் அணிக்காக விளையாடி வரும் Mbappé மீது ஸ்வீடனில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் Mbappé இன் வழக்கறிஞர் இதனை மறுத்துள்ளதோடு, இது அவதூறு பரப்பும் வகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
”இது தீங்கிழைக்கும் அவதூறு பரப்பும் செயலாகும். இதற்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்வதோடு, அவதூறு பரப்புவதற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது!’ என தெரிவித்தார்.
அதேவேளை, Stockholm நகர அரச வழக்கறிஞர் அலுவலத்தில் இது தொடராக கேட்டறிந்தபோது, வழக்கு பதிவு செய்துள்ளமை உண்மை தான் என தெரிவித்தனர்.
மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025