Paristamil Navigation Paristamil advert login

'சிவப்பு சிறுவர்கள்' - பரிசில் ஒரு பழமையான சந்தை..!!

'சிவப்பு சிறுவர்கள்' - பரிசில் ஒரு பழமையான சந்தை..!!

21 தை 2020 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 20711


இன்றைய பிரெஞ்சு புதினத்தில், பரிசில் உள்ள மிக பழமையான ஒரு சந்தை குறித்து அறிந்து கொள்ளலாம். 
 
இந்த சந்தைக்கு பெயர் 'சிவப்பு சிறுவர்கள்'. அட.. உண்மை தாங்க.. <<Marché des Enfants Rouges>> என்பது தான் அதன் பெயர். 
 
பரிசில் உள்ள சந்தைகளில் மிக பழமையானது இது தான். 1628 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த சந்தை. 
 
காலா காலமாக இந்த சந்தை திறக்கப்படுவதும், மக்கள் அதை தொடர்ச்சியாக பயன்படுத்துவது என பரிஸ் மக்களுக்கு இது ஒரு வாழ்வியலாக மாறியது. 
 
 
அதைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு இந்த சந்தை 'வரலாற்றுச் சிறப்புமிக்க' சந்தை என அறிவித்தார்கள். 
 
பழங்கள், காய்கறிகள், பூக்கள், உணவு பதார்த்தங்கள் என்பவற்றதோடு இங்கு உணவகமும் உள்ளது.
 
அதெல்லாம் இருக்கட்டும், அதென்ன 'சிவப்பு சிறுவர்கள்?'
 
அதாவது இந்த சந்தையில் வரும் வருமானத்தின் ஒரு பகுதி ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு (ஆரம்ப காலத்தில்) வழங்கப்பட்டது. 
 
'தொண்டு' நிறுவனம் என்றாலே சிவப்பு வர்ணம் தானே. 
 
அதன் காரணமாக தான் 'சிவப்பு சிறுவர்கள்' என பெயர் சூட்டியிருந்தார்கள். 
 
பரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் (39 Rue de Bretagne) இல் உள்ளது இந்த சந்தை. அவசியம் ஒருதடவையேனும் விஸிட் அடியுங்கள்;)
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்