WhatsApp-யில் இனி குறைந்த ஒளியில் வீடியோ கால் செய்யலாம்...!
16 ஐப்பசி 2024 புதன் 09:20 | பார்வைகள் : 962
மெட்டா நிறுவனத்தின் தகவல் பரிமாற்று செயலியான WhatsApp-யில் குறைந்த ஒளியில் வீடியோ கால் செய்யும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல தகவல் பரிமாற்று செயலியான WhatsApp, குறைந்த ஒளி நிலைகளில் வீடியோ அழைப்புகளை மேம்படுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்கள் இந்த குறைந்த ஒளி நிலைகளை வீடியோ அழைப்புகளில் பயன்படுத்தும் போது சிறந்த வீடியோ தரத்தை பெறவும், குறைவான புள்ளிகள்(grain-free) எதிர்கொள்ளவும் இது அனுமதிக்கும்.
இந்த புதிய அம்சத்தை பெற , உங்களது வீடியோ அழைப்புகளின் போது திரையின் மூலையில் காணப்படும் விளக்கு(bulb icon) சின்னத்தை செயல்படுத்த வேண்டும்.
இது அம்சமானது iOS மற்றும் Android சாதனங்களில் கிடைக்கிறது, ஆனால் இவை இணையதள பயன்பாட்டில் கிடைப்பது இல்லை.
குறைந்த ஒளி நிலை புதுப்பிப்புகளுடன் WhatsApp தனிப்பயனாக்க கூடிய அரட்டை தீம்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சம் பயனர்கள் பல்வேறு பின்னணி நிறங்கள் மற்றும் பாணிகளுடன் தங்கள் உரையாடல்களை தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.
ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு கிடைத்தாலும், அரட்டை தீம்கள் அம்சம் விரைவில் பரவலான பயனர்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.