இயக்குனர் வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி?
16 ஐப்பசி 2024 புதன் 10:32 | பார்வைகள் : 6372
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது 'பிரதர்' எனும் படத்தில் நடித்துள்ளார் இப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி கலந்து கொண்டு வருகிறார். இதில் ஜெயம் ரவி கூறியதாவது, " இயக்குனர் வெற்றிமாறனை சமீபத்தில் சந்தித்து ஒரு படம் இணைந்து பண்ணலாம் என கேட்டபோது, வெற்றிமாறனின் கமிட்மென்ட் உள்ள படங்கள் பற்றி தெரிவித்தார். ஆனாலும், அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் . கூடியவிரைவில் வெற்றிமாறனின் கதையில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது" என்றார்.
பிரதர் படம் தவிர்த்து ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இதுதவிர மேலும் இரு படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். ஹிந்தியில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan