Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து பரிதாபமாக பலியாகிய  குழந்தை 

கனடாவில் உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து பரிதாபமாக பலியாகிய  குழந்தை 

16 ஐப்பசி 2024 புதன் 12:18 | பார்வைகள் : 5001


கனடாவின் விண்ணிபெக் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இருந்து  குழந்தை ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விண்ணிபெக் கம்பர் லேண்ட் வீதியில் இந்த கட்டிடம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டடத்தின் 19 ஆம் மாடியில் ஜன்னலில் இருந்து குழந்தை விழுந்து உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டிடத்திலிருந்து விழுந்த குழந்தை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் ஓர் விபத்து எனவும் இது எவ்வித குற்ற செயல்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இச்சம்பவத்துடன் தொடர்புடைய வரம் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது விண்ணிபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்