Paristamil Navigation Paristamil advert login

பரிசில் ஒரு வியக்கவைக்கும் கலைக்கூடம்..!!

பரிசில் ஒரு வியக்கவைக்கும் கலைக்கூடம்..!!

20 தை 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 19314


பரிசில் Atelier des Lumières எனும் ஓவிய கலைக்கூடம் இருப்பது உங்களுக்கு தெரியுமா..??! இதை பற்றி மேலதிக விபரங்கள் அறிந்துகொள்வதற்கு முன்னர், கீழுள்ள புகைப்படங்களை பாருங்கள். 
 
 
 
 
'அட்டகாசம்' என சொல்லத் தோன்றுகின்றதா..?! இந்த கலைக்கூடம் பரிசில் உள்ளது. இதை புகைப்படத்தில் பார்ப்பதை விட நேரில் பார்க்கும் போது நீங்கள் வேறு ஒரு உலகத்தில் இருப்பீர்கள். 
 
கடந்த இரண்டு தசாப்த்தங்களாக மூடப்பட்டிருந்த ஒரு பழைய கட்டிடத்தை எடுத்து 300 சதுர மீற்றரில் இந்த கலைக்கூடத்தை அமைத்துள்ளார்கள். 'டிஜிட்டல் ஆர்ட்ஸ்' என ஆங்கிலத்தில் சொல்லப்படும் என ஓவியங்கள் அனைத்தும் ஒரு மாய உலகம்.   இருளடைந்த கட்டிட்டத்தில், சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்கள் மாத்திரம் ஒளிரும்.. அவை அசையும். தரையில் எல்லாம் ஓவியங்கள் அசையும். அந்த அனுபவம் மிக அலாதியானது. 
 
அதை நேரில் சென்று அனுபவியுங்கள். 
 
தற்போது இது குறித்து சில அவசியமான தகவல்கள். 
 
• இந்த L’Atelier des Lumières கூடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதி தான் திறக்கப்படும் என தெவித்தார்கள். 
 
*ஊடகவியலாளர்களுக்கு €29 கட்டணமும்,  சாதாரணமாக €18 கட்டணமும், 65  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு €14 கட்டணமும், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், கல்வி தொடர்பான நுழைவு போன்றவற்றிற்கு €12 கட்டணமும், 5 தொடக்கம் 25 வயதுடையவர்களுக்கு €10 கட்டணமும் அறவிடப்படுகின்றன. ஐந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசம். 
 
*செல்லப்பிராணிகள், கேமராக்கள், தொலைபேசிகளுக்கு அனுமதி இல்லை. (அந்த அனுபவத்தை நீங்கள் புகைப்படங்களில் அடக்க முடியாது வேறு) 
 
*எங்க இருக்கு என தானே கேட்கின்றீர்கள்..?? 38 rue Saint Maur 75 011 Paris. இதுதான் முகவரி. 
 
*திங்கள்- வியாழன் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை திறக்கப்படும். மாலை 5 மணிக்குத்தான் இறுதி நுழைவு. வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் இரவு 7 மணி வரை திறக்கப்படும்.
 
மார்ச் மாதத்தில் குழந்தைகளுடன் செல்ல திட்டமிடுங்கள். கொண்டாடுங்கள்...!! 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்