காதல் தோல்வியில் இருந்து மீள வேண்டுமா.?
16 ஐப்பசி 2024 புதன் 14:27 | பார்வைகள் : 986
பிரேக் அப்கள் வலி மிகுந்ததாக இருக்கலாம், இதனால் சிலர் முன்னாள் காதலன்/காதலியிடம் இருந்து வாங்கிய பரிசுகளை ஞாபகமாக வைத்திருக்க கூடும். இந்த பொருட்களை வைத்திருப்பது உங்கள் வளர்ச்சியை தடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
கடந்த காலத்துடன் பிணைக்கப்பட்ட நினைவுகளை நீங்கள் சுமக்க நேரிடும் போது உங்கள் மனம் இனம்புரியாத கவலையை அடைய நேரிடும். எனவே உங்கள் முன்னாள் காதலன்/காதலியை உங்களுக்கு நினைவூட்டக்கூடிய விஷயங்களை அகற்றுவது முக்கியம். நீங்கள் ஏன் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
உங்களால் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது: ஒரு காலத்தில் இதயத்திற்கு நெருக்கமாக இருந்த நபரிடமிருந்து பிரிந்து செல்வது வேதனையாக இருக்கும். ஒரு உறவின் இழப்பை ஒருவர் சந்திக்கும் போது தூக்கமில்லாத இரவுகள் என பலவிதமான வலி உணர்ச்சிகளை உணருவது பொதுவானது. உங்களுக்கு பகல் மற்றும் இரவுகள் முடிவில்லாததாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் அதிலிருந்து வெளியேறி இயல்பு நிலைக்கு சென்றவுடன், கடந்த காலத்தை பற்றி நினைக்காமல் இருப்பது நல்லது. இதற்கு பரிசு பொருட்களை வைத்திருக்காமல் இருப்பது அவசியம்.
வலியிலிருந்து வெளியேற உதவும்: காதல் முறிவுகள் உங்களுக்கு வெறுப்பையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தலாம், ஆனால் உங்கள் முன்னாள் உடமைகளை நீங்கள் தூக்கி எறிந்தால், அது உங்களை அமைதிப்படுத்த உதவும். மேலும் உங்கள் முன்னாள் காதலன்/காதலி கொடுத்த பரிசுகளை தூக்கி போடுவது வலி மிகுந்த வாழ்க்கையில் இருந்து உங்களை வெளியேற அனுமதிக்கும். மேலும் இது ஒரு சிகிச்சை செயல்முறையாக கூட இருக்கும்.
சுய பாதுகாப்பு: காதல் முடிவை கடந்து முன்னேறுவது கடினமாக இருக்கலாம், ஆனால் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் கவனிப்புக்கும் இது முக்கியம். உங்களிடம் இருந்து விலகி சென்ற நபரை நீங்கள் நினைத்து கொண்டே இருந்தால் அது உங்கள் சுயமரியாதை மற்றும் சுய மதிப்புக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் முன்னாள் காதலன்/காதலி கொடுத்த உடமைகளை தூக்கி எறிவது சுய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மன்னிப்பு: நீங்கள் உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக விரும்பினால், மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் காதலன் /காதலி கொடுத்த பரிசு பொருட்களை அகற்றுவது உங்களுக்கு முன்னேற உதவும். எந்த வெறுப்பும் இல்லாமல், உங்கள் முன்னாள் காதலி/காதலனை மறந்து மன்னித்து மகிழ்ச்சியுடன் செல்லலாம்
புதிய தொடக்கங்கள்: புதிய தொடக்கங்களைச் செய்வதற்கு, கடந்த காலத்தை விட்டுவிடுவது முக்கியம், நீங்கள் பொருத்தமற்ற ஆடைகள் அல்லது உங்களுக்கு சேராத பொருட்களை நிராகரிப்பது போல உங்கள் முன்னாள் உறவையும் தூக்கி எரிந்து விடுங்கள். இது உங்கள் நிகழ்கால வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவும்.