Paristamil Navigation Paristamil advert login

தென் கிழக்கு பகுதிகளில் அடை மழை.. வெள்ள அபாயம்!!

தென் கிழக்கு பகுதிகளில் அடை மழை.. வெள்ள அபாயம்!!

16 ஐப்பசி 2024 புதன் 14:53 | பார்வைகள் : 6702


பிரான்சின் தென் கிழக்கு மாவட்டங்களில் பருவ மழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஒக்டோபர் 16, இன்று புதன்கிழமை மாலை முதல் Lozère, Gard, Alpes-Maritimes மற்றும் Var ஆகிய மாவட்டங்களுக்கும், இரவு 10 மணி முதல் Ardèche மாவட்டத்துக்கு 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில இடங்களில் வேகமான காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகலின் போதே பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மேலும் பல சாலைகள் வெள்ளத்தால் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்