Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடு செல்ல காத்திருந்த யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

வெளிநாடு செல்ல காத்திருந்த யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

16 ஐப்பசி 2024 புதன் 16:06 | பார்வைகள் : 4357


வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 80 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 80 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு, இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைக்காத நிலையில் , இளைஞன் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பணத்தினை பெற்றுக்கொண்டவரை கைது செய்து, விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதமன்றில் முற்படுத்திய போது , சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்