வாவ்வ் பரிஸ்..! - அசத்தும் மூன்று தகவல்கள்..!!
17 தை 2020 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19672
இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பரிஸ் குறித்த மூன்று அட்டகாசமான தகவல்களை அறிந்துகொள்ளலாம். மூன்றுமே உங்களுக்கு ஆச்சரியத்தை தரலாம்..
1) பரிசில் நீங்கள் நினைத்தது போல் உங்களுக்கு பிடித்த மகிழுந்தை சடாரென வாங்கிவிடலாம். ஆனால் அதை டக்ஸியாக பயன்படுத்த முடியாது. சொல்லப்போனால் பரிசில் மிக ஆடம்பரமான தொழில டக்ஸி ஓடுவது தான். ஏன் என்றால் அதற்கான அனுமதி பத்திரம் எடுப்பதற்கான விலை..
சராசரியாக €200,000 கள் செலுத்தி தான் வாடகை மகிழுந்துக்கான அனுமதி பத்திரம் எடுக்கவேண்டும். (நீங்கள் தற்போது செய்யும் தொழில் தெய்வமாக தெரியுமே..?!)
2) நீங்கள் வெண்ணைக்கட்டி (சீஸ்) பிரியரா..? ம்ம்ம் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கின்றீர்கள். உலகில் வேறு எங்கும் இல்லாதவாறு பரிசில் 'ஆயிரம்' வகையான சீஸ்கள் கிடைக்கின்றன. வகை வகையாக தொகை தொகையாக வாங்கி சாப்பிடலாம்.
3) பரிஸ் மூன்றாம் வட்டாரத்தில் ஒரு வீடு உள்ளது. மிக சாதாரண வீடுதான். ஆனால் அது திடீரென புகழடைந்துவிட்டது. அதற்கு காரணம் அதன் வயது தான். பரிசில் உள்ள மிக பழமையான வீடு என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 3 ஆம் வட்டாரத்தின் rue de Montmorency வீதியில் உள்ள 51 ஆம் இலக்க வீடு தான் அது என தெரியவந்தது. 1407 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு அது. (இதற்கு பின்னால் ஒரு பெரும் கதையே உள்ளது. அதை பின்னொரு நாளில் பார்க்கலாம்..)