Paristamil Navigation Paristamil advert login

■ லீனா : ஒருவருடத்தின் பின்னர் சடலம் மீட்பு!

■ லீனா : ஒருவருடத்தின் பின்னர் சடலம் மீட்பு!

16 ஐப்பசி 2024 புதன் 17:44 | பார்வைகள் : 8434


கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் காணாமல் போன லீனா (Lina) எனும் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பிரான்சையும் உலுக்கியிருந்த இச்சம்பவம் Plaine (Bas-Rhin) நகரில் சென்ற வருட செப்டம்பரில் இடம்பெற்றிருந்தது. 15 வயதுடைய சிறுமியான லீனா காணாமல் போனதை அடுத்து, தீவிரமாக தேடப்பட்டார். ஒரு வருடங்களாக அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், மத்திய கிழக்கு பகுதியான Nièvre நகரில் ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான சதுப்பு நிலப்பகுதி ஒன்றில் மரக்கட்டைகளுக்கு இடையே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளை சேகரித்து, அது லீனாவின் சடலம் என்பதை உறுதி செய்துள்ளனர்.

அவரைக் கடத்தி கொலை செய்திருந்தார் என சந்தேகிக்கப்பட்ட 43 வயதுடைய Samuel Gonin என்பவர், கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்