Argenteuil : மாணவிக்கு கத்திக்குத்து!

17 ஐப்பசி 2024 வியாழன் 05:19 | பார்வைகள் : 9086
மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கியபோது, பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் மாணவியைக் கத்தியால் குத்தியுள்ளார்.
ஒக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை பகல் 1 மணி அளவில் இச்சம்பவம் Argenteuil (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. 18 வயதுடைய மாணவி ஒருவர் அவரது தரிப்பிடத்தில் இறங்கிய போது, தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர், அவரை கத்தியால் தாக்கியுள்ளார்.
குறித்த மாணவியுடன் பேருந்தை விட்டு இறங்கிய மாணவன் ஒருவருக்கும் கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டுவிட்டு ஆயுததாரி தப்பி ஓடி மறைந்துள்ளார். பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் இரண்டுமணி நேரம் கழித்து பிற்பகல் 3 மணி அளவில் அவரைக் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.