பிரான்சில் இப்படி ஒரு எழுதப்படாத சட்டம்..!!
16 தை 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 19088
பிரான்ஸ் எப்போதும் ஆச்சரியங்கள் நிறைந்தது தான். அதன் சட்டங்கள் சில நேரங்களில் சீரியசாகவும், சில நேரங்களில் 'என்னது இப்படி ஒரு சட்டமா?' என ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.
பிரான்சில் எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது. அதாவது பிரான்சில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் Victor-Hugo எனும் பெயரில் ஒரு வீதியாவது இருக்க வேண்டும்..!!
மாவீரன் நெப்பிலியன் பெயருக்கு கூட அப்படி ஒரு நிலமை இல்லை, ஆனால் Victor-Hugo இற்கு உள்ளது. அது ஏன்..??!
அவர் ஒரு மிகப்பெரும் எழுத்தாளர். இலக்கிய வாதி. அவரின் பெயரின் ஒவ்வொரு நகரத்திலும் குறைந்தது ஒரு வீதியாவது உள்ளது.
பரிசில்...??!
பரிசின் 16 ஆம் வட்டாரத்தில் Avenue Victor-Hugo எனும் மிக பிரபலமான வீதி உள்ளது.
இது தவிர, லியோன், மார்செ உட்பட சிறிய குக்கிராமங்கள் வரை இந்த பெயர் கொண்ட வீதிகள் உள்ளன...
ஆச்சரியம் தான் இல்லையா..??!