இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்த இத்தாலி...!
17 ஐப்பசி 2024 வியாழன் 14:12 | பார்வைகள் : 2038
இஸ்ரேல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் காசா மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றான இத்தாலி இருந்து வருகிற நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேலுக்கு புகுந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர்.
இதில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரை தொடங்கியது.
இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்தநிலையில் ஒரு ஆண்டை கடந்து போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது.
, "காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது" என்றுள்ளார்.