பரிசை சுற்றிப்பார்த்துக்கொண்டு இரவு உணவை ருசிக்கலாம்!! (பகுதி 2)
10 தை 2020 வெள்ளி 10:32 | பார்வைகள் : 19115
சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் தங்கள் விருப்பங்களை (Stars) அள்ளித்தெளித்த உணவகம் இது. ஏன் என்றால் சுற்றுலாப்பயணிகளால் இரவு நேரத்தின் அழகை ரசிப்பதற்கு இதை விட்டால் வேறு உபயம் இல்லை.
நாள் ஒன்றுக்கு இரண்டு பயணங்கள் என்று சொன்னோமில்லையா..?!
முதலாவது பயணம் மாலை 6 மணிக்கு. மொத்த நேரம் 90 நிமிடங்கள். இரவு உணவுடன் சேர்த்து மொத்த கட்டணம் நபர் ஒருவருக்கு €79 இல் இருந்து ஆரம்பிக்கின்றது.
இரண்டாவது பயணம் தான் மேலும் சுவாரஷ்யம்.
இரவு 8:30 மணிக்கு இந்த பயணம் ஆரம்பிக்கின்றது. இதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை நபர் ஒருவருக்கு €99 இல் இருந்து ஆரம்பிக்கின்றது. ஜன்னலோர இருக்கை என்றால் €130 இல் இருந்து ஆரம்பிக்கின்றது.
எந்த இடங்களை எல்லாம் பார்க்கலாம்..?!
நோர்து-டேம் தேவாலயத்தில் ஆரம்பித்து, Orsay Museum, Conciergerie, City Hall உட்பட Eiffel Tower என பல முக்கியமான இடங்களை எல்லாம் பார்க்கலாம். குறிப்பாக இங்கிருந்து இரவில் ஜொலிக்கும் ஈஃபிள் கோபுரத்தை பார்த்தால்.. ஆஹா.. அற்புதமான அனுபவம் அது.
ஒவ்வொரு பயணத்திற்கும் கண்டிப்பாக 30 நிமிடங்களுக்கு முன்னதாக இங்கு வந்துவிட வேண்டும்.
சுற்றுப்பயணம் முடியும் வரை இலவச தரிப்பிட வசதி உள்ளது. கப்பலில் சிகரெட் புகைக்க தனியே வசதி உள்ளது.
உணவகம் முற்றாக குளிரூட்டப்பட்டது. பிரெஞ்சு தயாரிப்பின் மிக ருசியான வைன்கள் எல்லாம் இங்கு கிடைக்கின்றன.
இங்கு ஒருதடவை சென்றுவிட்டு வாருங்கள்.. நீங்கள் செலவிட்ட ஒவ்வொரு பென்னியும் பெறுமதி மிக்கதாக இருக்கும்..!!
(விபரங்களுக்கு முகவரியை கூகுளில் தேடவும் : Bateaux-Mouches Dinner Cruise)