பரிசை சுற்றிப்பார்த்துக்கொண்டு இரவு உணவை ருசிக்கலாம்!!

9 தை 2020 வியாழன் 11:30 | பார்வைகள் : 4310
பரிசில் இரவு உணவை ருசிப்பதற்கு எத்தனையோ உணவகங்கள் உள்ளன. இன்றைய பிரெஞ்சு புதினத்தின் ஒரு வித்தியாசமான இரவு உணவு அனுபவம் பற்றி தெரிந்துள்ளலாம்.
சுற்றிலும் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட சிறிய கப்பல். அங்கே உள்ளது உங்களுக்கான உணவகம். நீங்கள் முன்பதிவு செய்துகொண்டு உங்களுக்கான இருக்கைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். பின்னர் அங்கு சென்று நீங்கள் அமர்ந்தால் போதும், நீங்கள் பரிசை சுற்றிப்பார்த்துகொண்டே உங்கள் இரவு உணவை உண்ணலாம்..
மொத்தமாக இரண்டரை மணிநேரம் பயணிக்கும் இந்த கப்பல். இந்த உணவகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பியானோவில் அற்புதமான 'லைவ்' இசையை ரசித்துக்கொண்டே நீங்கள் உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் உரையாடிக்கொண்டு சாப்பிடலாம்.
ஆனால் அத்தோடு முடிந்ததா என்றால் அது தான் இல்லை. இதுவரை நீங்கள் பரிசை எத்தனை தடவை சுற்றி வந்திருந்தாலும், இந்த கப்பலில் பார்க்கக்கூடிய 'வியூ' வேற லெவலில் இருக்கும்.
அதற்கு ஏற்றால் போல் மிக திட்டமிட்டமிட்டு இந்த பயணத்தை சென் நதியில் ஏற்படடுத்தியுள்ளார்கள்.
நாள் ஒன்றுக்கு இரண்டு பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
Bateaux Mouches உணவகமே இந்த வசதியை ஏற்படுத்தி தருகின்றனர்..??!
சரி இதற்கு எவ்வளவு கட்டணம்?!, வேறு என்ன வசதிகள் உள்ளன..? எங்கெல்லாம் பயணிக்கும்..??
- நாளை வரை காத்திருங்கள் சொல்கின்றோம்..!!
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1