இன்றும் தொடரும் நெப்போலியன் வளைவின் சாதனை..!!
8 தை 2020 புதன் 10:30 | பார்வைகள் : 19710
நெப்போலியன் வளைவு ஒரு 'TRIUMPHAL ARCH' கட்டிடக்கலை ஆகும். உலகம் முழுவதும் இதுபோன்ற 'வளைவுகள்' உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்குள் வெளி நாட்டில் இருந்து வருபவர்களை வரவேற்கும் ஒரு விடயமாக இது உள்ளது.
பரிசில் உள்ள நொப்போலியன் வளைவு 164 அடி உயரமும் 148 அடி அகலமும் கொண்டது.
இன்று உலகில் உள்ள அனைத்து வளைவுகளையும் எடுத்துக்கொண்டால் இது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய வளைவு என்ற பெருமையை தக்கவைத்துள்ளது.
நெப்போலியன் வளைவு கட்டப்பட்டு1982 ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிகபெரிய வளைவாக இருந்தது. அதன் பின்னர் 1982 ஆம் ஆண்டில் வடகொரியாவில் கட்டப்பட்ட Arch of Triumph வளைவு இந்த சாதனையை முறியடித்தது.
இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டபோதும், இன்று வரை அந்த சாதனை முறியடிக்கப்படாமலேயே உள்ளது..!!