Paristamil Navigation Paristamil advert login

அதிர்ச்சி பாடசாலைகளில் சேர்ந்த மாணவர்களில் வீழ்ச்சி.

அதிர்ச்சி பாடசாலைகளில் சேர்ந்த மாணவர்களில் வீழ்ச்சி.

19 ஐப்பசி 2024 சனி 07:04 | பார்வைகள் : 7685


கடந்த வெள்ளிக்கிழமை (18/10) தேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட குறிப்பின் படி கடந்த 2023 வது கல்வியாண்டோடு ஒப்புடுகையில் 2024 வது கல்வியாண்டில் பாடசாலைகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 வது கல்வியாண்டின் ஆரம்பத்தில் 78.100 மில்லியன் மாணவர்கள் பாடசாலைகளில் பதிவு செய்யப்பட்டனர் ஆனால் 
2024 கல்வியாண்டின் தொடக்கத்தில், அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 6.262 மில்லியன் மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது 1.2% சதவீத மாணவர்களின் வீழ்ச்சியை காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களின் வீழ்ச்சி அதிகமாக ஆரம்ப பாடசாலைகளில் காணப்படுவதால் பிரான்சில் குழந்தை பிறப்பு வீதம் சரிந்து செல்வதை காட்டுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் முதியோர் நிறைந்த நாடாக திகழ்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்