வாழ்நாளில் ஒருதடவை கூட நெப்போலியன் வளைவை பாத்திராத மாவீரன்..!!
6 தை 2020 திங்கள் 10:30 | பார்வைகள் : 18816
பரிசில் மிக பிரபலமான சுற்றுலாத்தலமான நெப்போலியன் வளைவு குறித்து பல சுவாரஷ்யமான தகவல்கள் அறிந்து வருகின்றோம். இன்றைய பிரெஞ்சு புதினத்திலும் ஆச்சரியங்கள் தொடர்கின்றது.
Arc de Triomphe வளைவினை மாவீரன் நெப்போலியனே கட்டுவதற்கு பணித்தான். 1836 ஆம் ஆண்டு வரை இந்த கட்டிடப்பணி நிறவடையவில்லை.
நெப்போலியன் இறந்து 15 வருடங்களின் பின்னரே கட்டிடபணிகள் நிறைவடைந்தன.
***
நெப்பிலியன் தனது இரண்டாவது மனைவியான Marie Louise இனை திருமணம் செய்துகொண்டிருந்த போது, Arc de Triomphe கட்டிடத்தின் 'மினியேச்சர்' ஒன்றை மரபலகைகளில் அமைத்திருந்தார்கள். அதை நெப்பிலியனும் இரண்டாவது மனைவியும் பார்த்திருந்தனர். (இரண்டாவது மனைவிக்கு பிடித்திருந்ததா இல்லையா என்பது குறித்த தகவல்கள் இல்லை)
நெப்போலியன் 1814 ஆம் ஆண்டு பதவியை துறக்கும் போது, சில வருடங்கள் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் 1826 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் பின்னர் 20 வருடங்கள் கழித்து நெப்போலியனின் உடல் பிரான்சுக்கு கொண்டுவரப்பட்ட போது (1840 ஆம் ஆண்டு) இந்த நெப்போலியன் வளைவுக்கு உள்பக்கமாக கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு.