மஹிந்த ராஜபக்க்ஷவின் வாகனங்களை பறித்த அநுர அரசாங்கம்
                    19 ஐப்பசி 2024 சனி 13:46 | பார்வைகள் : 11427
மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் மூன்று பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் கூறுகையில், மஹிந்த ராஜபக்க்ஷவின் மெய்ப்பாதுகாவலர்கள் பயன்படுத்திய சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தமக்கு தெரிய வந்துள்ளது .
இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ எதிர்கொள்ளக் கூடியதான அச்சுறுத்தல்களை மதிப்பிடாமல் இவ்வாறு செயற்படுவது தவறு என்றும் தெரிவித்தார்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan