அவல் ரொட்டி..
19 ஐப்பசி 2024 சனி 15:07 | பார்வைகள் : 671
அவல் காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அதோடு இது கலோரி குறைந்த உணவு என்பதால் உடல் எடை குறைக்க நினைப்போரும் சாப்பிடலாம். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் - 1 கப்
கேரட் - 1
வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தே.அ
அரிசி மாவு - 1/2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
அவலை தண்ணீரில் சேர்த்து 20 நிமிடத்திற்கு ஊற வையுங்கள்.
நன்கு ஊறியதும் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளுங்கள். பின் அவலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளுங்கள்.
பின் அதோடு துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் , அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
பின் அதை 10 நிமிடத்திற்கு ஊற வையுங்கள். நன்கு ஊறியதும் கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு தட்டில் எண்ணெய் தடவி அடை போல் தட்டி எடுங்கள்.
பின் அதை தோசை தவாவில் போட்டு இரு புறமும் பொன்னிறமாக வரும் வரை சுட்டு எடுங்கள்.
அவ்வளவுதான் அவல் ரொட்டி தயார். இதற்கு காரச்சட்னி பொருத்தமாக இருக்கும்.