நெப்போலியன் வளைவில் யானை வடிவில் கட்டிடம்..!!

4 தை 2020 சனி 10:30 | பார்வைகள் : 21788
பரிசில் உள்ள நெப்போலியன் வளைவு என அழைக்கப்படும் Arc de Triomphe குறித்து பல தகவல்கள் தெரிந்துகொண்டோம். இன்று ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தை பார்க்கலாம்...
Arc de Triomphe வளைவு 1806 ஆம் ஆண்டு நெப்போலியனால் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் அதே இடத்தில் வேறு ஒரு கட்டிடம் கட்ட அனுமதி கோரப்பட்டது.
நெப்போலியன் காலத்திற்கு முன்பு, பிரெஞ்சு கட்டிடக்கலைஞர் Charles Ribart என்பவரால் இங்கு ஒரு கட்டிடம் கட்ட தீர்மாணிக்கப்பட்டது.
முழங்கால்களை மடித்து அமர்ந்திருக்கும் யானை வடிவில் மிக பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்று கட்ட தீர்மாணிக்கப்பட்டது.
அது ஒரு மூன்று அடுக்கு கட்டிடம். கட்டிடத்தின் படிக்கட்டுகளை யானையின் தும்பிக்கை போல் வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் பின்னர் சில காரணங்களுக்காக இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு பிரெஞ்சு அரசு அனுமதி அளிக்கவில்லை.
அந்த இடம் சும்மாவே கிடந்தது. அதன் பின்னர் தான் நெப்போலியனின் வருகை இடம்பெற்றது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1