Paristamil Navigation Paristamil advert login

La Marseillaise சிற்பம்! - கூட்டணி யுத்தத்திற்கு கிளம்பியவர்கள்..!!

La Marseillaise சிற்பம்! - கூட்டணி யுத்தத்திற்கு கிளம்பியவர்கள்..!!

2 தை 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 18802


நெப்போலியன் வளைவில் செதுக்கப்பட்டுள்ள La Marseillaise சிற்பத்தினை நீங்கள் நேரில் பார்த்துள்ளீர்களா..?! இந்த புகைப்படத்தில் பாருங்கள். 
 
 
இந்த சிற்ப வேலைப்பாடு 1833 ஆம் ஆண்டில் இருந்து 1836 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலப்பகுதியில் 
Arc de Triomphe வளைவில் செதுக்கப்பட்டது. 
 
François Rude எனும் பிரெஞ்சு சிற்பக்கலைஞரால் செதுக்கப்பட்ட இந்த சிற்பத்தில் உள்ளவர்கள் யார்..??! 
 
இவர்கள் அனைவரும் 1792 ஆம் ஆண்டு இடம்பெற்ற கூட்டணிப் யுத்தத்திற்கு பிரெஞ்சு வீரர்கள் தரப்பில் படையெடுத்தவர்கள். அப்படியென்றால் இராணுவ வீரர்களா என்றால் இல்லை. இவர்கள் சாதாரண பிரெஞ்சு குடிமக்கள். யுத்தத்தில் தங்களின் பங்கும் இருக்கவேண்டும் என ஆவேசமாக கிளம்பியவர்கள். 
 
பெண்களுடன் குழந்தைகளும் மிக ஆக்ரோஷமாக யுத்தத்திற்கு புறப்பட்டனர். 
 
இந்த சிற்பத்தில் அந்த ஆக்ரோஷம் மிக தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 
 
அவர்களின் நினைவாகவே இந்த சிற்பம் Arc de Triomphe இல் செதுக்கப்பட்டுள்ளது. அடுத்தமுறை இங்கு செல்லும் போது இதை தவறவிடாமல் பார்த்துவிடுங்கள்..!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்