Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஹொட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டம்: 30 பேர் கைது

இலங்கையில் ஹொட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டம்: 30 பேர் கைது

20 ஐப்பசி 2024 ஞாயிறு 09:50 | பார்வைகள் : 623


நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் நேற்று மாலை  இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

நுவரெலியா பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கேரளா கஞ்சா 6 கிராம் 90 மில்லி கிராம், 12 போதைப்பொருள் மாத்திரைகள் , குஷ்  போதைப்பொருள் 1380 மில்லி கிராம், ஐஸ் போதைப்பொருள் 400 மில்லி கிராம் , கொக்கைன் போதைப்பொருள் 150 மில்லி கிராம் உட்பட பல்வேறு வகைப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றை வைத்திருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 38 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் வெளி  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (20)  நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். 

நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்