நெதன்யாகுவுக்கு எதிராக கைதாணை... அமெரிக்க சட்டத்தரணி
20 ஐப்பசி 2024 ஞாயிறு 13:33 | பார்வைகள் : 1865
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் போர்க் குற்றங்களுக்கான தலைமை சட்டத்தரணியாக பொறுப்பேற்றதில் இருந்து கரீம் கான் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான இவரது முடிவு, ஜோ பைடனை கோபம் கொள்ள வைத்ததுடன், மேற்கத்திய நாடுகளின் நெருக்கமான தலைவர் ஒருவர் மீது முதல் முறையாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவரின் நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டது.
மொசாட்டின் இஸ்ரேலிய உளவாளிகள் ஒன்பது ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு எதிராக இரகசிய போரை நடத்தி வருவதாக வெளியான தகவலின் மத்தியிலேயே கரீம் கான் இந்த நடவடிக்கை எடுத்திருந்தார்.
கரீம் கானின் மின் அஞ்சல்கள், தரவுகள், குறுந்தகவல்கள் என அனைத்தையும் மொசாட் அமைப்பு ஊடுருவியது. இந்த நிலையில், கரீம் கான் வெளியிட்டுள்ள தகவல் மீண்டும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாமும், நீதிமன்றமும் கடுமையான அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளதாகவும், சமீபத்திய மாதங்களில், தமது மனைவி, பிள்ளை உட்பட குடும்ப உறுப்பினர்களும் குறி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எடின்பர்க்கில் பிரித்தானிய தாயாருக்கும் பாகிஸ்தானிய தந்தைக்கும் பிறந்த கரீம் கான் யார்க்ஷயரில் வளர்ந்தார். மேற்கு யார்க்ஷயரில் உள்ள ஆண்டுக்கு 19,600 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கும் சில்கோட்ஸ் பள்ளியில் கல்வி பயின்றார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சட்டம் படித்த பிறகு, பாரிஸ்டராக பணியாற்றத் தொடங்கினார் மற்றும் இரண்டு ஆண்டுகள் கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸில் பணியாற்றினார். இதனையடுத்து பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தரணியாக பொறுப்பேற்றார்.
தற்போது நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மீதான கைதாணை நீதிபதிகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஒப்புதல் அளித்தால், 124 நாடுகள் அதை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் இந்த 124 நாடுகளில் எங்கு சென்றாலும் நெதன்யாகு கைது செய்யப்படும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.