France Football : விளையாட்டு வார இதழ்..! - சில தகவல்கள்..!

7 மார்கழி 2019 சனி 11:30 | பார்வைகள் : 21218
France Football என்பது பிரான்சில் வெளியாகும் உதைப்பந்தாட்டம் தொடர்பான மிகப்பிரபலமான வார இதழ்..
வாரம் தோறும் வெளியாகும் இந்த வார இதழ், பிரான்ஸ் தவிர்த்து, ஐரோப்பா முழுவதும் விற்பனையாகும் மிக முக்கியமான இதழாகும்.
1946 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வார இதழ், முழுக்க முழுக்க உதைப்பந்தாட்டம் தொடர்பான செய்திகளை கொண்டு தனது பக்கங்களை நிரவுகின்றது.

உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான Ballon d'Or விருதினை இந்த வார இதழே வழங்கி வருகின்றது. ஐரோப்பா முழுவதும் சல்லடை போட்டு தேடப்பட்டு, மிகச்சிறந்த உதைப்பந்தாட்ட வீரருக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.
அதேவேளை, சிறந்த விளையாட்டுக் கழகத்துக்குமான விருதினையும் இந்த வார இதழ் வழங்கி வருகின்றது.
தவிர, இந்த இதழ் பிரபலமாக விற்பனையாவதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களின் 'எக்ஸ்குளூஸிவ்' புகைப்படங்களை இந்த இதழ் வெளியிடுகின்றது.
உதைப்பந்தாட்ட பிரியர்கள் அவசியம் தவறவிடாமல் படிக்கவேண்டிய வார இதழ் இது..!!