Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மீதான தாக்குதல்  -  இரகசிய ஆவணங்கள் கசிவு

ஈரான் மீதான தாக்குதல்  -  இரகசிய ஆவணங்கள் கசிவு

20 ஐப்பசி 2024 ஞாயிறு 13:46 | பார்வைகள் : 7192


ஈரான் மீதான தாக்குதல்  தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்து அமெரிக்க உளவுத்துறையில் 2 இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியிலிருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் பிரத்யேக பயிற்சி எடுத்துவரும் மற்றும் தாக்குதளுக்கு ஒத்திகை பார்க்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல் ஆவணத்தில் இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த எவ்வாறு தயாராகியுள்ள விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

மற்றொரு வானத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்