Paristamil Navigation Paristamil advert login

2-வது குழந்தை பிறந்தவுடன் கூடாரத்தில் குடியேறிய தந்தை

2-வது குழந்தை பிறந்தவுடன் கூடாரத்தில் குடியேறிய தந்தை

20 ஐப்பசி 2024 ஞாயிறு 14:09 | பார்வைகள் : 2741


பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்கு வெளியே கூடாரத்தில் தனியாக வாழத் தொடங்கியுள்ளார்.

அவர் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராகும் சவால்களை சமாளிக்க முடியாமல், வீட்டை விட்டு தோட்டத்தில் கூடாரம் அமைத்து வாழத் தொடங்கியுள்ளார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, பலரிடையே விவாதத்தை தூண்டியுள்ளது.

38 வயதான ஸ்டுவார்ட் மற்றும் 33 வயதான அவரது மனைவி கிளோ ஹாமில்டன், கேம்பிரிட்ஜில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு வயதில் ஃபேபியன் என்கிற மகன் உள்ளான்.  

அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபின், ஸ்டுவார்டின் ஆளுமையில் மாற்றங்கள் தெரியத் தொடங்கின.

தன் தொழிலுக்கும் குடும்பத்துக்கும் இடையே சமநிலை பேண முடியாமல், குழந்தைகளை வளர்ப்பதில் சிரமங்களை எதிர்கொண்டார்.

சவால்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கவே, தோட்டத்தில் கூடாரம் அமைத்து அதில் வசிக்கத் தொடங்கினார்.

அவரது திடீர் முடிவு குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் ஆச்சரியப்படுத்தியது. சிலர் தம்பதிகளுக்கு மோதல்கள் இருக்கலாம் எனக் கூறினார்கள்.

ஆனால், கிளோ கணவனின் உண்மையான பிரச்சனையை புரிந்து கொண்டார். “ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயின் நலனைப் பற்றியே அனைவரும் கேட்கிறார்கள்; ஆனால் தந்தையின் நலனை யாரும் கேட்பதில்லை,” என கிளோ கூறினார்.

கூடாரத்தில் வசிக்கத் தொடங்கியபின், இருவருக்கும் இடையில் உறவுகள் மேம்பட்டதாக கிளோ பகிர்ந்துகொண்டார். இதனால், கணவனுடன் நல்ல தொடர்பு ஏற்பட்டு, ஸ்டுவார்ட் சோர்வின்றி இருக்கிறார்.

ஸ்டுவார்ட் தனது அனுபவத்தைப் பகிர்ந்து, தந்தைகளும் தங்களின் மனநலத்தை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கிளோவும் பிரச்சனையை புரிந்துகொண்டு நள்ளிரவில் கணவனிடமிருந்து உதவியை எதிர்பார்க்காமல் சமரசத்துடன் வாழ்கிறார்.

இது postnatal depression என அழைக்கப்படும் பிரச்சனை. இது தாய்மார்களுக்கு மட்டுமல்ல, தந்தைகளுக்கும் ஏற்படலாம்.

தந்தைகள், பெற்றோராகும் சவால்களில் தள்ளாடி, தங்கள் துணைக்கு தேவையான ஆதரவை வழங்க முடியவில்லை என்று உணரலாம்.


 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்