Paristamil Navigation Paristamil advert login

Mont Blanc : சிறுவர்களும் விபத்துக்களும்..!!

Mont Blanc : சிறுவர்களும் விபத்துக்களும்..!!

6 மார்கழி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18861


'வெள்ளை மலை' என அழைக்கப்படுகின்ற Mont Blanc மலையை மிகச்சிறுவயதில் ஏறி சாதனை படைத்தது Asher Silver எனும் சிறுவன். 
 
2009 ஆம் ஆண்டு ஜூலையில் குறித்த 10 வயதுடைய சிறுவன் ஏறி சாதனை படைத்திருந்தான். 
 
அதன் பின்னர் அந்த சாதனையை Patrick Sweeney எனும் அமெரிக்க தொழிலதிபர் தனது மகனை வைத்து (மகனுக்கு அப்போது 9 வயது) முறியடிக்க முயற்சி செய்தார். அது என்ன ஆனது என நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்த்தோம். 
 
ஆனால் முயற்சிகள் அத்தோடு நின்றுவிடவில்லை. 
 
ஓகஸ்ட் 2014 ஆம் ஆண்டு பெயர் தெரிவிக்கப்படாத ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது 5 வயது மகனுடன் மலையில் ஏற முற்பட்டார். 3,200 மீற்றர் தொலைவு ஏறியதும், அவர் மலை பாதுகாப்பு ஜோந்தாமினர்களால் தடுக்கப்பட்டார். அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 
 
பின்னர் 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி, ஹங்கேரியாவைச் சேர்ந்த தாயார் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் மலையில் ஏறினார். 9 வயதுடைய இரட்டையர்கள் அவர்கள். 3,800 மீற்றர் ஏறிய நிலையில், உலங்குவானூர்தி மூலம் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
 
சாதனையை முறியடிக்கும் முயற்சி இதுவரையில் நடந்துகொண்டு தான் உள்ளது. 
 
தற்போது பத்து வருடங்களை கடந்த நிலையில், அந்த சாதனை இன்னமும் மிச்சம் உள்ளது..!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்