சோதனையில் முடிந்த மலையேற்றம்!!
5 மார்கழி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 19028
ஆல்ப்ஸ் மலையில் கொட்டிக்கிடக்கும் பனியில் மலையேறுவது பலருக்கு பொழுது போக்கு. அதுவே ஆபத்தாகவும் முடியும் நாட்ககும் உண்டு. அப்படிப்பட்ட சோதனையான ஒரு சம்பவம் தான் இன்றைய பிரெஞ்சு புதினத்தில்..
Mont Blanc மலையில் இதுவரை மிக சிறிய வயதில் ஏறியவர் என்ற சாதனை 2009 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டது. 10 வயது சிறுவன் ஒருவன் அச்சாதனையை நிகழ்த்தியிருந்தான்.
பின்னர் சில வருடங்கள் அப்படியே இருந்தது அந்த சாதனை.
அதனை முறியடிக்கின்றேன் பார் என கிளம்பியவர் அமெரிக்க தொழிலதிபர் Patrick Sweeney. தனது 9 வயது மகனை Mont Blanc மலையில் ஏற்ற முயன்றார்.
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் ஒரு நாளில்...
P.J எனும் அவரின் 9 வயது மகனும், Shannon எனும் 11 வயது மகளும் களத்தில் குதிக்க, சாதனை நிகழ்த்தப்படுமா என பலர் ஆர்வமாக காத்திருந்தனர்.
ஆனால், அந்த சாதனை சம்பவம் பெரும் சோகத்தில் முடிவடைந்தது. பாரிய பனிச்சரிவு ஏற்பட்டது. பலத்த காற்றும் வீச... குழந்தைகளோடு சேர்ந்து Patrick Sweeney ம் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் அது ஒரு அதிஷ்ட்டமான நாள் என்று தான் சொல்லவேண்டும்.
10 வயது சிறுவனின் சாதனை முறியடிக்கப்படவில்லை. அதன் பின்னரும் பல முயற்சிகள் இடம்பெற்றன. அவை குறித்து நாளை பார்க்கலாம்...!!