உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை - ஜனாதிபதி வாக்குறுதி

21 ஐப்பசி 2024 திங்கள் 15:17 | பார்வைகள் : 4468
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் நேற்று தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கவனம் செலுத்தப்பட்டது. நாங்கள் பொலிஸ் திணைக்களத்தை விசாரணைக்கு ஏற்ற துறையாக மாற்றினோம். இதனால் பலர் தற்போது குழம்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தவர்கள் இன்று 5 ஆண்டுகளுக்கு பின்னரே விழித்துள்ளனர். இப்போது அந்த அறிக்கை கொடு, இந்த அறிக்கை கொடு என்கிறார்கள். அந்த இரண்டு அறிக்கைகளும் ரணில் விக்கிரமசிங்கவின் அறிக்கைகள்.
அது இரண்டும் விசாரணைக் குழுக்கள் அல்ல. நான் வந்ததும் அந்த அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என்று முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் கேட்டேன்.
இந்த விசாரணையை நசுக்கவே ரணில் விக்கிரமசிங்க விரும்பினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளோம்.
கோமாவில் இருந்தவர்கள் தற்போதே விழித்துள்ளனர். அதனை நசுக்குவதற்கும், சுருக்குவதற்கும். இந்த நபரின் தலையீடு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அல்ல. எனவே, நாங்கள் அவர்களுக்கு அடிபணிய மாட்டோம், அதில் சிக்கிக்கொள்ளவும் மாட்டோம். நியாயமான விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துவோம். நாம் எதை மறைக்க வேண்டும்? யாரை காப்பாற்ற வேண்டும்?
தேசிய மக்கள் சக்தியான நாங்கள் மூழ்கும் வாளிக்காக தடுமாறவும் மாட்டோம், வாளியை மூழ்கடிப்பவர்களுக்கு இடமளிக்கவும் மாட்டோம்” என்றார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3