பிரித்தானியாவில் கன மழை - வானிலை எச்சரிக்கை
21 ஐப்பசி 2024 திங்கள் 16:28 | பார்வைகள் : 1617
பிரித்தானியாவின் சில பகுதிகளில் சுமார் 430 மைல்களுக்கு ஒரு பெரும் மழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஷ்லே புயலின் தாக்கம் தணியும் முன்னர் வட அயர்லாந்து, டம்ஃப்ரைஸ் மற்றும் காலோவே, வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தை வியாழன் மாலை 3 மணிக்குள் மழை தாக்க கூடும் என்று கணித்துள்ளனர்.
லண்டன்டெரி மாவட்டத்தில் உள்ள கோலரைனில் இருந்து தெற்கு கடற்கரையில் உள்ள போர்ன்மவுத் வரை கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து முழுவதும் கிழக்கு நோக்கி வீசும் என்று எதிர்பார்க்கப்படும் மழையானது, சில இடங்களை நன்றாக துவைத்தெடுக்கும் என்றே கூறுகின்றனர்.
வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை மிகக் கடுமையான பிரளயத்தை எதிர்கொள்ளும் என்று எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் மணிக்கு 2.5 மிமீ முதல் 5 மிமீ வரை மழை பெய்யும் என்றும் அடுத்த வார இறுதியில் அதிக மழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தின் வடமேற்கு பகுதியில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நள்ளிரவு முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை காற்றுக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கையும் அமுலில் உள்ளது.