பிரான்சை ஸ்தம்பிக்க வைத்த 1995 ஆண்டு வேலை நிறுத்தம்!!
4 மார்கழி 2019 புதன் 10:30 | பார்வைகள் : 19020
இன்றைய பிரெஞ்சு புதினத்தில் 24 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மாபெரும் வேலை நிறுத்தம் ஒன்று குறித்து பார்க்கலாம்.
நாழ்லை டிசம்பர் 5 ஆம் திகதி நாடு முழுவதும் பலத்த வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ள நிலையில், இத்தகவல் உங்களுக்கு மேலும் அதிர்ச்சியாக இருக்கலாம்.
1995 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நாடு தழுவிய மாபெரும் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வலது சாரி கட்சியில் இருந்து 1995 ஆம் ஆண்டு மே மாதத்தில் Jacques Chirac ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக Alain Juppé தெரிவு செய்யப்பட்டார்.
பிரதமர் Alain Juppé, புதிய நலத்திட்டம் ஒன்றை முன்வைத்தார். நிதி பற்றாக்குறை காரணமாக, ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 5 தொடக்கம் 3 வீதம் வரை குறைக்க தீர்மானித்தார்.
புரட்சி வெடித்தது...!!
மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் வீதியில் இறங்கினார்கள். அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வேலையை புறக்கணித்துவிட்டு வீதிகளில் கொடி பிடித்தனர்.
தனியார் துறை, ஆசிரியர் சம்மேளனம் என நாடு முழுவதும் ஸ்தம்பித்தது.
கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் வேலையை புறக்கணித்துவிட்டு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த 10 மில்லியன் பேர்களில் 4 மில்லியன் பேர் பொதுத்துறை ஊழியர்கள். 2 மில்லியன் பேர் தனியார் துறை மற்றும் அரை-தனியார் துறையில் பணி புரிபவர்கள்.
தொடருந்து உட்பட அனைத்து பொது போக்குவரத்துக்களும் முடங்கின. சுற்றுலாத்துறை பலமாக அடி வாங்கியது.
உலக நாடுகள் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டமே தலைப்புச் செய்தியாகின.
1995 ஆம் ஆண்டு, ஒரு மறக்கமுடியாத வருடம்..!!