Paristamil Navigation Paristamil advert login

எல்லா கோரிக்கையையும் ஏத்துகிட்டோம்; டாக்டர்களை அழைக்கிறார் மம்தா

எல்லா கோரிக்கையையும் ஏத்துகிட்டோம்; டாக்டர்களை அழைக்கிறார் மம்தா

22 ஐப்பசி 2024 செவ்வாய் 01:33 | பார்வைகள் : 156


கோல்கட்டாவில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களிடம் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு நடத்தினார்; மீண்டும் பணிக்கு திரும்ப அழைப்பு விடுத்துள்ளார்.

கோல்கட்டாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அக்டோபர் 22ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள இளநிலை மற்றும் மூத்த மருத்துவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக கூறி இருந்தனர். மருத்துவர்கள் அளித்த கெடு முடியவுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மருத்துவர்கள் குழுவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.

முதல்வர் அழைப்பை ஏற்ற போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள், மம்தா பானர்ஜியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்தது.

கூட்டத்தில் மாநில அளவில் பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. தலைமைச் செயலாளர் தலைமையிலான இந்த குழுவில் மாநில அரசு பிரதிநிதிகள் 5 பேர், 2 மூத்த மருத்துவர்கள், 2 இளநிலை மருத்துவர்கள், ஒரு பெண் மாணவி ஆகியோர் இடம்பெறுவர் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த குழு, கல்லூரியில் உள்ள அனைத்து குறைகளையும்,அதை களைவதற்கான நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடும். சுகாதாரம் தொடர்பான அனைதது பிரச்னைகளையும் தீர்க்கும் வகையில் செயல்படும் என தீர்மானிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையின் போது பெரும்பாலான முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாகவும், போராட்டத்தை கைவிட்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்