Paristamil Navigation Paristamil advert login

Drancy : ஒருமணிநேரம் பின் தொடர்ந்து இருவரைக் கைது செய்த காவல்துறை!

Drancy : ஒருமணிநேரம் பின் தொடர்ந்து இருவரைக் கைது செய்த காவல்துறை!

22 ஐப்பசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 5994


ஒருமணிநேரமாக பின் தொடர்ந்து சென்று இரு கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Drancy (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் ஒக்டோபர் 15 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. சாதாரண சீருடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், திருடர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை அடையாளம் கண்டுள்ளனர். 

பின்னர் அவர்களை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றுள்ளனர். கிட்டத்தட்ட ஒருமணிநேரத்துக்குப் பின்னர், அவர்கள் வீடொன்றின் ஜன்னல் வழியாக உள்நுழைவதைக் கண்டனர். 

அதுவரை பதுங்கியிருந்த காவல்துறையினர், திடீரென பாய்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். 

அவர்கள் 30 வயதுடைய லிபிய குடியுரிமை கொண்டவர் எனவும், 17 வயதுடைய அல்ஜீரிய குடியுரிமை கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்