Alstom - இது தொடருந்து தயாரிப்பாளர்களின் கதை..!! (பகுதி 2)
3 மார்கழி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19021
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் Alstom நிறுவனம் குறித்த பல தகவல்களை தெரிந்துகொண்டோம். இன்று, இதே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஐரோப்பா முழுவதும் பயணிக்கும் ஒரு அசாத்திய தொடருந்து குறித்து தெரிந்துகொள்வோம்.
அதற்கு முதல் இந்த புகைப்படத்தை பாருங்கள்.
தண்டவாளம் வளைந்து வளைந்து செல்கிறது அல்லவா..?! அதிவேகத்தில் மின்னல் போல் வரும் தொடருந்து, வந்த வேகத்தில் இதில் வளைந்தால் என்னாகும்..? தூக்கி வீசப்படும் என்கின்றீர்களா..?! அது தான் இல்லை. உள்ளே இருக்கும் பயணிகளுக்கு இப்படி வளைகின்றது என்பது கூட தெரியாத வண்ணம் மின்னல் வேகத்தில் வளைந்து தொடருந்து பயணிக்கும்.
இதைத்தான் ஆங்கிலத்தில் Tilting train என அழைக்கின்றனர்.
1960-70 காலப்பகுதிகளில் இதுபோன்ற தொடருந்து தண்டவாளங்கள் அமைக்கப்பட ஆரம்பிக்கப்படுவதுடன், தொடருந்துகளும் இதற்கு ஏற்றால் போல் தயாரிக்கப்பட்டன.
அப்படி Alstom நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு தொடருந்து தான் Pendolino.
முதலில் Fiat Ferroviaria நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தொடருந்துகளை பின்னர் Alstom நிறுவனம் வாங்கி, மிக திறம்பட தயாரித்து விநியோகிஸ்தது.
இன்று இந்த தொடருந்துகள் இத்தாலி, ஸ்பெயின், போலாந்து, போர்துகல், ஸ்லோவேனியா, ஃபின்லாந்து, இரஷ்யா, செ குடியரசு, பிரித்தானியா, ஸ்லோவேகியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பயணிக்கின்றது.