Paristamil Navigation Paristamil advert login

லெபனானில் இருந்து  தப்பிச் சென்ற ஹிஸ்புல்லா தலைவர்

லெபனானில் இருந்து  தப்பிச் சென்ற ஹிஸ்புல்லா தலைவர்

22 ஐப்பசி 2024 செவ்வாய் 08:39 | பார்வைகள் : 1754


ஹிஸ்புல்லா படைகளின் உயர்மட்ட தலைவர்களான ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவரது உறவினரான ஹஷேம் சஃபிதீனை திட்டமிட்டு இஸ்ரேல் படுகொலை செய்துள்ள நிலையில், துணை பொதுச்செயலாளரான நைம் காசிம் லெபனானில் இருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தீவிரத் தாக்குதல்களுக்குப் பிறகு சஃபிதீன் என்ன ஆனால் என்பது தொடர்பில உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.


ஹசன் நஸ்ரல்லா படுகொலைக்கு பின்னர், ஹிஸ்புல்லா படைகள் சார்பில் இஸ்ரேலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார் நைம் காசிம். மட்டுமின்றி, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதன் பின்னர், ரகசிய இடத்திற்கு ஹிஸ்புல்லா தலைவர்கள் பலர் மாற்றப்பட்டிருந்தனர்.

ஆனால், உயர்மட்ட சந்திப்பு ஒன்றின் போதே, ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவரது உறவினரான ஹஷேம் சஃபிதீன் ஆகியோர் கொல்லப்பட்டனர். லெபனான் மோதலுக்கு ஒரே தீர்வு போர்நிறுத்தம் மட்டுமே என்று கூறியுள்ள நைம் காசிம்,

இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல்களை விரிவுபடுத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார். செப்டம்பர் 27ம் திகதி லெபனானில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்திற்குப் பிறகு காசிம் மூன்று உரைகளை ஆற்றியுள்ளார்.


இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து நைம் காசிம் தற்போது உயர்மட்ட அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்