Paristamil Navigation Paristamil advert login

Alerte enlèvement

Alerte enlèvement

22 ஐப்பசி 2024 செவ்வாய் 09:29 | பார்வைகள் : 2959


முக்கிய, நிலையான மருத்துவ பராமரிப்பு தேவையான பிறந்து 17 நாட்களே ஆன குழந்தை ஒன்று, நேற்றைய தினம் இரவு 23:00 மணிக்கும் 23 :30 மணிக்கும் இடையில் Aulnay-sous-Bois பகுதியில் உள்ள l’hôpital Robert-Ballanger மருத்துவ மனையின் மகப்பேறு பகுதியில் இருந்து கடத்தப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளதோடு, குழந்தையை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

தங்க நிறத்தை ஒத்த நிறத்தில் தலைமுடியும், கடத்தப்பட்ட போது, ஆறுமாதங்கள் அளவான பழுப்பு நிற டி-ஷர்ட், மற்றும் வெள்ளை அடர்த்தியான வெல்வெட் பிஜாமாக்களை அணிந்திருந்தது என மருத்துவமனை தெரிவித்துள்ளது. குழந்தையைப் பெற்றோர்களே கடத்திச் சென்று இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக. காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளர். 

கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோரின் வயது
23 வயதுடைய ஆணும், 25 பெண்ணும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் குழந்தைக்கு தொடர்ச்சியான நிலையான மருத்துவ தேவை இருப்பதாகவும் இல்லையேல் குழந்தைக்கு உயிர் ஆபத்து ஏற்படும் எனவும் மருத்துவமனை மேலும் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட குழந்தையையோ அல்லது பெற்றோர்களையோ கண்டுபிடித்தால் 197 எனும் இலக்கத்துக்கு அழைக்கும் படியும் இலையேல் குறிப்பிட்ட (pppj.alerte.enlevement@interieur.gouv.fr) மின்னஞ்சலுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கும் படியும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்