Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு

இலங்கையில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு

22 ஐப்பசி 2024 செவ்வாய் 12:59 | பார்வைகள் : 159


இலங்கையில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு வழங்கப்படவுள்ளது. 

இன்று 42,000 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளதோடு, நவம்பரில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடவுச்சீட்டு பிரச்சினை கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த அரசாங்கத்தால் விலைமனு வழங்கப்பட்ட நிறுவனம் உரிய நேரத்தில் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கவில்லை. எவ்வாறிருப்பினும் நாம் அந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறை சரி செய்வதற்காக நாம் தற்போது பாடுபட்டு வருகின்றோம். கடந்த சனிக்கிழமை 7,500 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பபெற்றன. இன்று புதன்கிழமை 42,000 கடவுசீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளன. எனவே மக்கள் கலவரமடையத் தேவையில்லை. தற்போது கடவச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை.

இவ்வாரத்துக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறும். நவம்பரில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் கொண்டு வரப்படவுள்ளன. எனவே மக்கள் அவசரப்பட்டு கொழும்புக்கு வர வேண்டிய தேவை இல்லை. மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்