Paristamil Navigation Paristamil advert login

நீதித்துறைக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் மதுரை கிளை

நீதித்துறைக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் மதுரை கிளை

22 ஐப்பசி 2024 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 3849


நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார் என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 45 ஏக்கர் நில மோசடி தொடர்பாக நித்தியானந்தாவின் சீடர் சுரேகா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை கூறியதாவது: நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார். பல்வேறு வழக்குகளில் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் உள்ளது. ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு வருவது இல்லை. அவர் தலைமறைவாக இருந்து கொண்டு நீதிமன்றத்தை இயக்குகிறாரா? அவரது சொத்துகளை இந்திய நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? எனக்கேள்வி எழுப்பிய கோர்ட் எங்கள் தலையீடு இல்லை என உறுதி மொழி தாக்கல் செய்தால் முன்ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும் என உத்தரவிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்