Paristamil Navigation Paristamil advert login

அதிவேகமாக 300 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்த வீரர்! 

அதிவேகமாக 300 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்த வீரர்! 

22 ஐப்பசி 2024 செவ்வாய் 15:38 | பார்வைகள் : 636


தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா டெஸ்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். 

வங்காளதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா (Kasigo Rabada) 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டினார். 

இதற்கு முன்பு டெல் ஸ்டெய்ன் (439), ஷான் பொல்லாக் (421), மஹாயா நிதினி (390), ஆலன் டொனால்டு (330) மற்றும் மோர்னே மோர்க்கல் (309) ஆகிய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருந்தனர்.  

அத்துடன் ரபாடா இமாலய சாதனை ஒன்றையும் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற வாக்கர் யூனிஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

வாக்கர் யூனிஸ் (Waqar Younis) 12,602 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், ரபாடா 11,817 பந்துகளில் இந்த சாதனையை செய்துள்ளார். ஆனால் இருவருமே தமது 65வது டெஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்டில் இமாலய சாதனை நிகழ்த்திய ரபாடாவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்