Paristamil Navigation Paristamil advert login

Alstom - இது தொடருந்து தயாரிப்பாளர்களின் கதை..!!

Alstom - இது தொடருந்து தயாரிப்பாளர்களின் கதை..!!

2 மார்கழி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18956


பிரான்சுக்குத் தேவையான தொடருந்துகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான Alstom குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம். 
 
மாகாணங்களை இணைக்கும் சேவையான TGV தொடருந்துகள் அனைத்தையும் தயாரித்து வழங்கியது இந்த Alstom நிறுவனம் தான்.
 
உலகம் முழுவதும் 70 நாடுகளில் 26,000 ஊழியர்களுடன் மிக வெற்றிகரமாக இயங்கி வரும் இந்த நிறுவனம் 100 வீதம் ஒரு பிரெஞ்சு நிறுவனம். இதன் தலைமைச் செயலகம் Saint-Ouen-sur-Seine நகரில் உள்ளது. 
 
Als-Thom என்பது தான் நிறுவனத்தின் உண்மையான பெயர். 
 
Compagnie Française Thomson Houston எனும் நிறுவனமும் Société Alsacienne de Constructions Mécaniques எனும் இலத்திரனியல் தயாரிப்பு நிறுவனமும் 1928 ஆம் ஆண்டு ஒன்றாக இணைந்து இந்த Als-Thom எனும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தது. பின்னர் 1998 ஆம் ஆண்டு அப்பெயர் Alstom என மாறியது.
 
உலகின் மிக வேகமான தொடருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களில் Alstom நிறவனமும் ஒன்று. உலகம் முழுவதிலும் இருந்து இவர்களிடம் தொடருந்து 'ஓடர்' செய்ய வந்து செல்கின்றனர். 
 
TGV, ட்ராம் சேவை, மெற்றோ, மின்சார தொடருந்து, டீசல் தொடருந்து, தகவல் வழங்கி இயந்திரம், மின் வழங்கி இயந்திரம் என இவர்களின் தயாரிப்புக்கள் பல..  
 
பிரான்சில் TGV சேவை போன்று இத்தாலியில் மிக பிரபலமான சேவை AGV.  அப்படியென்றால் Automotrice Grande Vitesse என அர்த்தம். 2008 ஆம் ஆண்டு தயாரித்து வழங்கப்பட்ட இந்த தொடருந்து உலகின் மிகச்சிறந்த தொடருந்துகளில் ஒன்று. 
 
இவர்களின் தயாரிப்பில் மற்றுமொரு அசுர சாதனை படைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதும் இயங்கும் அந்த தொடருந்து குறித்த தகவல்கள் நாளை...!!
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்