அறிமுக போட்டியிலேயே அலறவிட்ட இலங்கை வீரர்! 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
22 ஐப்பசி 2024 செவ்வாய் 15:46 | பார்வைகள் : 4478
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதல் ஒருநாள் போட்டியில் நிஷான் மதுஷ்க தனது அறிமுக போட்டியிலேயே அதிரடி காட்டி மிரட்டியுள்ளார்.
இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது தொடக்க ஆட்டகாரர்களை அலிக் அத்தானாஸ்(10), பிராண்டன் கிங்(14) அடுத்தடுத்து இழந்தது.
பின்னர் வந்த கீசி கார்டி தன்னுடைய பங்கிற்கு 37 ஓட்டங்கள் குவித்தார். பொறுப்புடன் விளையாடிய ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 82 பந்துகளுக்கு 74 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
போட்டியில் 38.3 ஓவர்கள் வீசப்பட்டு மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல் பேட்டிங் கைவிடப்பட்டு போட்டி 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
DLS முறைப்படி போட்டி 37 ஓவர்களாக குறைக்கப்பட்டதை அடுத்து இலக்கு 232 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய அறிமுக வீரர் நிஷான் மதுஷ்க(Nishan Madushka) 54 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 69 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
மற்றொரு முனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சரித் அசலங்கா(Charith Asalanka) 71 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் 31.5 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan