Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு  ஆதரவை உறுதி செய்த அமெரிக்க ஜோ பைடன்

இஸ்ரேலுக்கு  ஆதரவை உறுதி செய்த அமெரிக்க ஜோ பைடன்

22 ஐப்பசி 2024 செவ்வாய் 16:22 | பார்வைகள் : 303


ஈரான் மீது இஸ்ரேல் முன்னெடுக்கவிருக்கும் பதிலடி தாக்குதலுக்கு அமெரிக்காவின் ஆதரவை ஜோ பைடன் உறுதி செய்துள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜெர்மனியில் ஜோ பைடன் முன்வைத்த கருத்தை சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதுக்குழு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சட்டவிரோத இராணுவ அத்துமீறலுக்கு மறைமுகமான ஒப்புதல் மற்றும் வெளிப்படையான ஆதரவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் எந்தவொரு இராணுவ நடவடிக்கை என்றாலும், அல்லது நடவடிக்கைக்கு தூண்டும் செயலாக இருந்தாலும் அதில் அமெரிக்கா தனது பங்கிற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் ஈரானின் தூதுக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பின்மையால் ஏற்படும் பேரழிவு விளைவுகளுக்கும் அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் விவகாரம் தொடர்பில் விவாதிக்க ஜேர்மனி சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஈரான் மீது இஸ்ரேல் எப்போது எங்கே தாக்குதலை தொடுக்கும் என தமக்கு தகவல் வந்துள்ளதாக குறிப்பிட்டதுடன், விரிவாக பதிலளிக்க மறுத்திருந்தார்.

தற்போது இதையே சுட்டிக்காட்டி ஈரான் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முன்னதாக ஈரான் மீது தாக்குதலை முன்னெடுக்கும் இஸ்ரேலின் திட்டம் குறித்த இரு முக்கியமான ஆவணங்கள் அமெரிக்க உளவு அமைப்புகளிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகவே ஈரான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்