Paristamil Navigation Paristamil advert login

Bois de Boulogne பூங்காவும், நீரோடைகளும்..!!

Bois de Boulogne பூங்காவும், நீரோடைகளும்..!!

1 மார்கழி 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 19142


பரிசில் இரண்டாவது மிகப்பெரிய பூங்கா எது..?? சந்தேகமே இல்லாமல் Bois de Boulogne தான். 
 
845 ஹெக்டேயர்கள்.. (கிட்டத்தட்ட 2,088 ஏக்கர்கள்) நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்காவில் பலதரப்பட்ட நீர் தேக்கங்கள் தடாகங்கள் உள்ளன. 
 
இவை குறித்த மிக முக்கியமான தகவல்களை இன்றைய பிரெஞ்சு புதினத்தில் நீங்கள் அறிந்துகொள்ளப்போகின்றீர்கள். 
இந்த Bois de Boulogne பூங்காவில் இரண்டு பெரிய ஏரிகள் உள்ளன. எட்டு குளங்கள் உள்ளன.. அவற்றை இணைக்க மூன்று நீரோடைகளும் உள்ளன. ஒரு இடத்தில் ஒரு நீர்வீச்சியும் உள்ளது. 
 
அட..?? 
 
ஆனால் இவை அனைத்தும் இயற்கை அன்னை தந்ததல்ல.. அனைத்துமே செயற்கையாக உருவாக்கப்பட்டது. Ourq ஆற்றில் இருந்து பாதை அமைத்து தண்ணீரை பூங்காவுக்குள் இழுத்து மேற்படி அனைத்து நீர் தேக்கங்களையும் அமைத்துள்ளனர். 
 
குறிப்பாக Lac Inferieur எனும் ஒரு குளம் உள்ளது. இதுவே இங்குள்ள எட்டு குளங்களில் மிக பெரியது. இக்குளத்தில் 'படகுச்சவாரி' வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தவிர நடுவில் ஒரு குட்டித்தீவும் உள்ளது. குளத்தைச் சுற்றி நடைபாடை உள்ளது. 'வோக்கிங்' மேற்கொள்ள இதைவிட அழகான சூழல் எங்குமே இல்லை. 
 
 
இந்த பூங்காவில் உள்ள குளம், ஓடை என அனைத்தும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதை நீங்கள் நம்பவே மாட்டீர்கள் நேரில் சென்று பார்த்தால். 
 
 ***
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்