Paristamil Navigation Paristamil advert login

கிறிஸ்மஸ் : 500 யூரோக்கள் கொடுப்பனவு!

கிறிஸ்மஸ் : 500 யூரோக்கள் கொடுப்பனவு!

23 ஐப்பசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 7897


வருடக்கடைசி செலவுகளுக்காக மிகவும் வறிய குடும்பங்களுக்கு ‘கிறிஸ்மஸ் கொடுப்பனவு’ வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக 500 யூரோக்கள் வரை வழங்கப்பட உள்ளது. 


* தனி ஒரு நபருக்கு 152.45 யூரோக்களும், 
* தம்பதிகளுக்கு 228.68 யூரோக்களும்,
* பெற்றோர்களில் ஒருவர் +  ஒரு பிள்ளைக்கு 308.72 யூரோக்களும்,

* பெற்றோர்களில் ஒருவர் + இரு பிள்ளைகளுக்கு 370.45 யூரோக்களும்,

* பெற்றோர் இருவர் + ஒரு பிள்ளைக்கு 274.41 யூரோக்களும்,

* பெற்றோர் இருவர் + இரு பிள்ளைகளுக்கு 320.15 யூரோக்களும்,

* பெற்றோர் ஒருவர் + மூன்று பிள்ளைகளுக்கு 452.78 யூரோக்களும்,

* பெற்றோர் இருவர் + மூன்று பிள்ளைகளுக்கு 381.13 யூரோக்களும்,

* பெற்றோர் ஒருவர் + நான்கு பிள்ளைகள் 535.10 யூரோக்களும்,

* பெற்றோர் இருவர் + நான்கு பிள்ளைகளுக்கு 442.11 யூரோக்களும் வழங்கப்பட உள்ளது.



ஒவ்வொரு வருடமும் இந்த கொடுப்பனவுகள் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொடுப்பனவுகளை 1998 ஆம் ஆண்டில் இருந்து Caf நிறுவனம் வழங்கி வருகிறது.

டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்த கொடுப்பனவுகள் ஏற்புடைய 2.3 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்ப உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்