SNCF அலுவலகத்தில் வெடிகுண்டுகள்.. பெரும் பரபரப்பு!

23 ஐப்பசி 2024 புதன் 13:40 | பார்வைகள் : 7126
Villeneuve-Saint-Georges நகரில் உள்ள SNCF தொடருந்து நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 செ.மீ நீளமுடைய ஆறு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை முதலாம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்தது எனவும், இயங்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இடம்பெற்றுவரும் கட்டுமானப்பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது. அதன்போது ஒக்டோபர் 22, நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலின் பின்னர் இந்த வெடிகுண்டுகள் குழிக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அதிஷ்ட்டசமாக பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
கண்ணிவெடி அகற்றல் பிரிவு சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு, குண்டுகள் மீட்கப்பட்டன.