தேச பக்தியை கண் முன் நிறுத்திய சிவகார்த்திகேயன்
23 ஐப்பசி 2024 புதன் 15:35 | பார்வைகள் : 1521
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் டிரைலர், முதல் முறையாக பார்க்கும் போது, "படத்தை உடனே பார்க்க வேண்டும்" என்ற ஆவல் ஏற்படுத்தி வருகிறது என்று கமெண்ட்களில் குவிந்து வருகிறது.
இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில், மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டர், அன்பான மனைவி, அழகான குழந்தை, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்வது, தீவிரவாதிகளை எதிர்ப்பது, ஒரு போர் வீரனுக்கு ஏற்படும் சவால்கள், இந்தியாவின் முதுகெலும்பான ராணுவத்தின் பெருமை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால், இந்த படம் ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமின்றி, ராணுவத்தின் பெருமையை உணர்த்தும் படமாகவும் இருக்கிறது என்பதும் இந்த இரண்டு நிமிட ட்ரைலரிலிருந்து தெரிகிறது.
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் சாய் ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.