Paristamil Navigation Paristamil advert login

Notre-Dame தேவாலயத்துக்கு - நுழைவுக் கட்டணம்??!!

Notre-Dame தேவாலயத்துக்கு - நுழைவுக் கட்டணம்??!!

24 ஐப்பசி 2024 வியாழன் 08:04 | பார்வைகள் : 6348


உலகப்புகழ் பெற்ற நோர்து-டேம் தேவாலயத்தினை பார்வையிட நுழைவுக்கட்டணம் செலுத்தவேண்டும் எனும் திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதுவரை இலவசமாக சென்று வரக்கூடிய இந்த தேவாலத்துக்கு இனிமேல் கட்டணம் செலுத்தி செல்லவேண்டும் எனும் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்சின் கலாச்சார அமைச்சர் Rachida Dati இந்த பரிந்துரையை முன்மொழிந்துள்ளார். அவரது இந்த பரிந்துரையை இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse வரவேற்றுள்ளார். இந்த கருத்தும், அதற்கு எழுந்த ஆதரவும் உடனடியாகவே பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘மத ஆலயத்துக்குச் செல்ல பணம் அறவிடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை’ என பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பில் தெளிவுபடுத்தல் ஒன்றை கலாச்சார அமைச்சர் வெளியிட்டுள்ளார். ‘நோர்து-டேம் தேவாலயத்துக்கு தொழச் செல்பவர்களுக்கு கட்டணம் அறவிடப்போவதில்லை. மாறாக சுற்றுலாப்பயணிகள், வேறு வணிக நோக்கோடு வருகை தருபவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக 5 யூரோக்கள் செலுத்த வேண்டும் என்பது தான் நோக்கம். அது தேவாலயத்தின் பராமரிப்புச் செலவுக்கு பயன்படுத்தப்படும்’ என Rachida Dati தெளிவுபடுத்தினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்